எருமப்பட்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை


எருமப்பட்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 9 April 2022 8:03 PM IST (Updated: 9 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சரவணன் (வயது 39). இவர் மேட்டுப்பட்டி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இன்று காலை மது குடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். 
அப்போது மது குடித்துவிட்டு வீட்டில் இருந்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும், பணிக்கு செல்லுங்கள் என்று அவருடைய மனைவி ஜெயந்தி கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சரவணனுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
 

Next Story