வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

போச்சம்பள்ளி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அலுச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் அவர் கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். கடந்த 2-ந் தேதி போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு ரமேஷ் வந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தனது சகோதரியின் மாந்தோப்பில் ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story