ஓசூரில் புதுநகர் வளர்ச்சி குழும கருத்து கேட்பு கூட்டம்- முதன்மை செயலர் பங்கேற்பு
ஓசூரில் புதுநகர் வளர்ச்சி குழும கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
ஓசூர்:
ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும முழுமை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் ஓசூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா கலந்து கொண்டு ஹோஸ்டியா, ஹோசியா, பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் புது நகர் வளர்ச்சி குழுமத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் நகர, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் சரவணவேல்ராஜ், உதவி கலெக்டர் தேன்மொழி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாசு கட்டுப்பாட்டு துறை மாவட்ட பொறியாளர் செந்தில்குமார், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், வன அலுவலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story