கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திம்மராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் தேவராஜ், கல்யாணசுந்தரம், மணி, நந்தகுமார், கிருஷ்ணப்பா, பாலகிருஷ்ணன், வெங்கடேசன், மஞ்சுளா, சின்னசாமி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான மாத ஊதியம், தர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story