அரசு பள்ளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலிகள்


அரசு பள்ளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலிகள்
x
தினத்தந்தி 9 April 2022 8:18 PM IST (Updated: 9 April 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலிகளை சிவக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

செஞ்சி,

வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சித்தாமூர், வீரணாமூர், இல்லோடு, நெகனூர், தையூர் ஆகிய 5 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடைபெற்றது. மேல்சித்தாமூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். செஞ்சி கல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மகிமை தாஸ் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேட்டு என்கிற ரங்கநாதன், ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோபால், பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் கண்ணாயிரம், ராஜாராமன், விஜி, ஹரி, ஜோதி முருகன், விஷ்ணு, பள்ளிக்கல்வி ஆய்வாளர் விநாயகமூர்த்தி, தலைமையாசிரியர் செந்தில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மற்ற 4 பள்ளிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டது. 

Next Story