ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
வாய்மேடு:
நாகை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம் நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கலிதீர்த்தமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் (பொறுப்பு) அமிர்தலிங்கம் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் வட்டார தலைவர் பாலகுமார், வட்டார செயலாளர் நெடுமாறன், கீழையூர் வட்டார கிளை பொறுப்பாளர் தமிழழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலை நடத்தி முடிக்க வேண்டும். பணி மாறுதல் கலந்தாய்வில் சிறப்பு முன்னுரிமை ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் 100 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். ஆசிரியர் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் சத்துணவு திட்டம் மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story