திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்:-
திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் திருவள்ளூருக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story