கறம்பக்குடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


கறம்பக்குடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை  உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 9 April 2022 9:59 PM IST (Updated: 9 April 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கறம்பக்குடி:
இளம்பெண் தற்கொலை 
கறம்பக்குடி அருகே உள்ள கண்ணுதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி அழகுராணி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யுவிதாஸ்ரீ என்கிற 3 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அழகுராணி வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகுராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை 
இதற்கிடையே தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அழகுராணியின் தாய் பரமேஸ்வரி ரெகுநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அழகுராணிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் புதுக்கோட்டை உதவி கலெக்டர் கருணாகரனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story