சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கட்டிட பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கட்டிட பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.10 கோடி அளவில் ரோப்கார் பணிகள் முடிவுற்ற நிலையில், பக்தர்கள் ஓய்வு அறை, உணவு அருந்தும் அறை, கழிவறைகள், வாகனம் நிறுத்துமிடம் ஆகிய பணிகள் ரோப்கார் கமிட்டி சார்பில் ரூ.21 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பொருட்கள் தரமாகவும் கட்டுமானப்பணிகள் உறுதியாகவும் இருக்க வேண்டும், பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நகராட்சி தலைவர் தமிழ்செல்வி, கோவில் செயல் அலுவலர் ஜெயா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ், நகராட்சி உறுப்பினர் அருண்ஆதி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story