நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கீரனூர்:
கீரனூர் அருகே நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் நீண்ட வேல்கம்பியில் அலகு குத்தியும், மயில் காவடி, பால்குடம், பறவைக்காவடி ஆகியவை எடுத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் எடுத்து சென்றனர். தீராத வயிற்று வலி போக்குவதற்கு அம்மனிடம் வேண்டிய பக்தர்கள் கோவில் வாசலில் வயிற்றில் மாவிளக்கு வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கீரனூர் பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் உடலில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து சென்றது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. மேலும் திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story