அரக்கோணத்தில் வெயில் கொடுமையால் முதியவர் சாவு

அரக்கோணத்தில் வெயில் கொடுமையால் முதியவர் இறந்தார்.
அரக்கோணத்தில் வெயில் கொடுமையால் முதியவர் சாவு
Published on

அரக்கோணம்

சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் மன உளைச்சலாக இருப்பதாகவும், எனவே திருப்பதி சென்று வருவதாகவும் கூறி விட்டு வந்துள்ளார். அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் இரண்டு நாட்களாக இங்கேயே சுற்றி பொது மக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் சுற்றி வந்தவர் சரியான உணவு இல்லாமல் இருந்ததால், வெயிலின் கொடுமையால் மயங்கி விழுந்து இறந்தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைபற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com