தர்மபுரி அருகே பஸ்சில் போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது 10 பேருக்கு வலைவீச்சு

தர்மபுரி அருகே  பஸ்சில் போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது 10 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 April 2022 10:31 PM IST (Updated: 9 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே ஓடும் பஸ்சில் போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி:
தர்மபுரி அருகே ஓடும் பஸ்சில் போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ஆபித் அலி (வயது 32). இவர் பணியை முடித்துவிட்டு அரசு பஸ்சில் வரும்போது 3 பேர் அமரும் இருக்கையில் படுத்திருந்த ஒருவரை எழுந்து அமருமாறு போலீஸ்காரர் கூறினார்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் போலீஸ்காரரை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அவர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார்.
4 பேர் கைது
இந்த நிலையில் போலீஸ்காரரை தாக்கிய தர்மபுரியை சேர்ந்த மாதையன் (63), அவருடைய மகன் சத்யநாராயணன் (22), குபேந்திரன் (22), மூர்த்தி (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story