தூய்மை பாரத இயக்கம் சார்பில் பெண்கள் சுகாதார நடைபயணம்
தூய்மை பாரத இயக்கம் சார்பில் பெண்கள் சுகாதார நடைபயண ஊர்வலம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கம் அமீரகத்தில் நீர்மேலாண்மை இயக்கத்தின் முன்மாதிரி கிராமமாக மாற்றிடும் திட்டத்தினை எலவம்பட்டி ஊராட்சி செயல்படுத்திட ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் சுகாதார நடைபயண ஊர்வலம் நடந்தது.
நடைப்பயண ஊர்வலத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா பங்கேற்று தொடங்கி வைத்தார். நடைப்பயணம் கிராமம் முழுவதும் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிந்தது. பின்னர் அங்கு நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலாம் பங்கேற்றார்.
எலவம்பட்டி ஊராட்சி முன்மாதிரி கிராமமாக தேவைப்படும் கழிவுநீர் மேலாண்மை வசதிகள் தனிநபர் உறிஞ்சி குழிகள், சமுதாய உறிஞ்சி குழிகள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க வேண்டும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை போக்குதல், நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாத்தல், பொது வெளிகளில் கழிவுநீர் தேங்கமால் உருவாக்க வேண்டும் ஆகிய பணிகளை இத்திட்டத்தின்கீழ் ஊராட்சியில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகப்பிரியா உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story