விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு


விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
x

திருக்கோவிலூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 58), விவசாயி. இவருடைய மகன் ரஞ்சித்தின் நிச்சயதார்த்த விழா விளந்தை கிராமத்தில் நடைபெற்றது. இதற்காக அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அங்கு சென்றார். பின்னர் விழா முடிவடைந்ததும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.  

இதுபற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் தர்மலிங்கத்தின் வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் தர்மலிங்கம் வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
1 More update

Next Story