கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 11:15 PM IST (Updated: 9 April 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம், 
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மற்றும் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு ரூ.1 கோடி வழங்கினால் மட்டுமே ஜாமீனில் விடுவிக்கப்படும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்தும் ராமேசுவரம் அந்தோணியார் கோவில் எதிரே உள்ள கடல் பகுதியில் நேற்று ஏ.ஐ.டி.யூ.சி மீனவர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மீனவர் சங்க பொறுப்பாளர் மார்க்கஸ் தலைமையில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்க தலைவர் மகத்துவம் ஏ.ஐ.டி.யு.சி மீனவர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், துணைச் செயலாளர் காளிதாஸ், தங்கச்சிமடம் நகர செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆரோக்கிய நாதன், ராஜ், கணேசமூர்த்தி, பாபு சுதாகர், நந்த கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story