

சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் அ.ம. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. மாநில சட்டப் பாதுகாப்பு குழு துணைச் செயலாளர் சக்கரவர்த்தி வரவேற்றார்.
தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன் கலந்துகொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாவித்திரி பெருமாள், ராமன், நகராட்சி வார்டு உறுப்பினர் அருண் ஆதி, வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை பகுதியில் நடைப்பற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் சோளிங்கர் நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கி திறந்து வைத்தார். துணைத்தலைவர் பழனி, தி.மு.க. நகர செயலாளர் கோபி மற்றும் நகராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்களும் உடனிருந்தனர்.