இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியில் மீன்பிடி திருவிழா திரளானவர்கள் மீன்பிடித்து சென்றனர்


இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியில் மீன்பிடி திருவிழா திரளானவர்கள் மீன்பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 10 April 2022 12:14 AM IST (Updated: 10 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

மலைக்குடிப்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

அன்னவாசல்:
இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டி புலவன்குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் நீர் நிரம்பியிருந்தது. இந்த நிலையில் குளத்தின் தண்ணீர் வற்றிய நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த அப்பகுதியினரால் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற திரளான பொதுமக்கள் வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் மீன்களை பிடிக்க குளத்திற்குள் இறங்கினர்.
இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, விரால், ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராம மக்கள் பிடித்து சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து உண்டு மகிழ்ந்்தனர். 
இதேபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Next Story