அன்னவாசல் பகுதியில் மழை: மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் செத்தன
மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் செத்தன
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென இலுப்பூர், அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, வயலோகம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, ஆரியூர், மாங்குடி உள்ளிட்டசுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒருமணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்யும் போது மின்னல் தாக்கி காலாடிப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது சினை பசுமாடு, சித்திக் என்பவரது பசுமாடு, இலுப்பூர் கரடிக்காடு பகுதியை சேர்ந்த மரியகிருஸ்டி என்பவரது சினையுடன் கூடிய பசுமாடு என 3 பசுமாடுகள் உயிரிழந்தது. நார்த்தாமலையில் திருவிழாவிற்கு வரவேற்க வைத்திருந்த பதாகைகள் அனைத்தும் காற்றில் கீழே சாய்ந்தது. முக்கண்ணாமலைப்பட்டி, மதியநல்லூர், கீழக்குறிச்சி பகுதிகளில் வாரச்சந்தைகள் மழையால் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story