மாநில அளவிலான ஆக்கி போட்டி


மாநில அளவிலான ஆக்கி போட்டி
x
தினத்தந்தி 10 April 2022 12:44 AM IST (Updated: 10 April 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான ஆக்கி போட்டி

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாநில அளவிலான ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 அணிகள் பங்கேற்கின்றன. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், பயிற்றுனர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலிறுதிக்கான முந்தைய போட்டிகள் நேற்று நடைபெற்றது. முதலாவது போட்டியில் அர்ஜுன் ஆக்கி கிளப் ஆற்காடு அணி, கிங்ஸ் ஆக்கி கிளப் கடலூர் அணியை 3  0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2 வது போட்டியில் குருவிநத்தம் அணியும், வேலூர் ஆக்கி அணியும் விளையாடின. இதில் குருவிநத்தம் ஆக்கி கிளப் அணி 2  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அணியும் ராஜபாளையம் யாழினி ஆக்கி அணியும் விளையாடின. இதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அணி 1  0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
4-வது போட்டியில் நேரு ஆக்கி கிளப் கிருஷ்ணகிரி அணியும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அணியும் விளையாடின. இதில் அண்ணா பல்கலைக்கழகம் 4  3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 5வது போட்டியில் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி அணியும், உடுமலை வித்யாசாகர் கலைக் கல்லூரி அணியும் விளையாடின. இதில் வித்யாசாகர் கலைக் கல்லூரி அணி 2  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 6-வது போட்டியில் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியும் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அணியும் விளையாடின. இதில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணி 5  4 என்ற கோல் கணக்கில் பாலக்கோடு அணியை வென்றது.
இந்த போட்டியை ஏராளமான மாணவர்களும், பேராசிரியர்களும், விளையாட்டு ரசிகர்களும் கண்டு களித்தனர். இன்று  காலை காலிறுதிப் போட்டிகளும், மதியம் அரையிறுதிப் போட்டிகளும், மாலை இறுதிப் போட்டியும் நடக்கிறது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டுகிறார்கள்.

Next Story