காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு
காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது.
தோகைமலை,
குளித்தலை காவிரி ஆற்றில் போர்வெல் அமைக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, மணப்பாறை வழியாக மேலூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது மணப்பாறை-குளித்தலை மெயின் ரோட்டில் பச்சனாம்பட்டி பிரிவு சாலையில் குளித்தலை- மேலூர் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. வருகிறது. இந்த குழாய் கடந்த 4-ந் தேதியன்று சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது பெரிய அளவில் உடைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story