ரூ.3 லட்சம் மின் கம்பி திருட்டு


ரூ.3 லட்சம் மின் கம்பி திருட்டு
x
தினத்தந்தி 10 April 2022 1:20 AM IST (Updated: 10 April 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

ரூ.3 லட்சம் மின் கம்பி திருட்டு

விருதுநகர்
விருதுநகர் அருகே சூலக்கரை துணை மின் நிலையம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தில் இருந்து செல்லும் மின் பாதையில் 2 ஆயிரத்து 400 மீட்டர் செம்பு மின்கம்பி திருடப்பட்டிருப்பதை அப்பகுதியில் ஆய்வுக்கு சென்ற மின் ஊழியர்கள் கண்டறிந்து சூலக்கரைமின்வாரிய உதவி என்ஜினீயர் முருகவேலிடம் தெரிவித்தனர். அவரும் அதனை ஆய்வு செய்து உறுதி செய்த பின்பு இதுபற்றி சூலக்கரை போலீசாரிடம் புகார் செய்தார். திருடுபோன செம்புமின் கம்பியின் மதிப்பு ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் ஆகும். இதுபற்றி சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story