சமரச நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி
சமரச நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர்,
கரூர் ஐந்துரோடு பகுதியில் உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் கரூர் மாவட்ட சமரச மற்றும் ஒத்திசைவு மையம் சார்பில் சமரச நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட நீதிபதியும், மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, சமரசம் தொடர்பான பதாகையை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ- மாணவிகள், சுயஉதவிக்குழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்ட பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் சமரசத்தின் பயன்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் துண்டுபிரசுரங்களை வழங்கினார். மேலும் பழைய கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்தநிகழ்ச்சியில் நீதிபதிகள், சமரசர்கள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மாவட்ட சமரச மற்றும் ஒத்திசைவு மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும், சார்பு நீதிபதியுமான மோகன்ராம் செய்திருந்தார்.
Related Tags :
Next Story