கால்நடைகளுடன் பொதுமக்கள் போராட்டம்


கால்நடைகளுடன் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 April 2022 2:08 AM IST (Updated: 10 April 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் கால்நடைகளுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திசையன்விளை:
திசையன்விளை கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நோய்வாய்பட்ட தங்கள் கால்நடைகளை சிகிச்சைக்காக ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வருகிறார்கள். இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனை திறக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் நோய்வாய்பட்ட ஆடு, மாடு, நாய், கோழிகளை சிகிச்சைக்காக வாகனங்களில் பொதுமக்கள் அழைத்து வந்து கால்நடை மருத்துவமனை முன்பு காத்து இருந்தனர். காலை 11.30 மணிவரையும் மருத்துவமனை திறக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கால்நடைகளுடன் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் டாக்டர் வந்த பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story