குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பறிமுதல்


குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பறிமுதல்
x
தினத்தந்தி 10 April 2022 2:34 AM IST (Updated: 10 April 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

தாமரைக்குளம்:
அரியலூர் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் சிலர் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரியலூர் நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரசாந்த், புல ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டோர் அரியலூர் நகரில் அம்மன் கோவில் தெரு, கன்னுப்பிள்ளைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குடிநீர் குழாயில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சிய வீட்டில் இருந்து மின்மோட்டாரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோல் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் யாரேனும் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் குறிஞ்சினால், அது பற்றி தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.

Next Story