161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
துமகூருவில் அமைக்கப்பட்டுள்ள 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் உள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயசாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேய சாமி சிலை இன்று(ஞாயிற்றுக்கிழமை) ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இந்த 161 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயசாமி சிலையை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமை தாங்க இருக்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக துமகூருவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செல்ல இருக்கிறார். பின்னர் ஆஞ்சநேய சாமி சிலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இதுதவிர சிலை திறப்பு விழாவில் பல்வேறு மடங்களின் மடாதிபதிகளும் பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பசவேசுவரா மடத்தின் மடாதிபதியான தனஞ்செயா செய்திருக்கிறார்.
Related Tags :
Next Story