பெரம்பூர் அருகே ஆவணமின்றி ரெயிலில் கொண்டு வந்த ரூ.60 லட்சம் பறிமுதல்


பெரம்பூர் அருகே ஆவணமின்றி ரெயிலில் கொண்டு வந்த ரூ.60 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 April 2022 4:01 PM IST (Updated: 10 April 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பூர் அருகே ஆவணமின்றி ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.60 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் சோதனை

சென்னை ஓட்டேரி போலீசார் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையில் ஏட்டு ராஜசேகர் மற்றும் அருள் ஆகியோர் நேற்று மதியம் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரெயிலில் வந்து இறங்கி ஆட்டோவில் ஏறிய 2 பேரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட குட்கா அல்லது கஞ்சா கடத்தி கொண்டு வந்துள்ளனரா? என சோதனை செய்த போது, அந்த பையில் கட்டு, கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.

ஹவாலா பணமா?

இதையடுத்து, பிடிபட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், பணத்திற்கான தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 35) மற்றும் நரேந்திரகுமார் (22) ஆகிய 2 பேரிடம் இருந்த 60 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். தகுந்த ஆவணம் இல்லாமல் பணத்தை எதற்காக கொண்டு வந்தார்கள்? ஹவாலா பணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


Next Story