பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா


பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 11 April 2022 12:00 AM IST (Updated: 10 April 2022 5:10 PM IST)
t-max-icont-min-icon

அகரகடம்பனூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிக்கல்:-

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் மெயின் சாலையில் உள்ள கண்ணாகூத்த அய்யனார், பத்ர காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் உலக நன்மைக்காகவும், வேளாண்மை செழிக்கவும் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை அகரகடம்பனூர் பெரியகுளத்தில் இருந்து கண்ணாகூத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவிலில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.
1 More update

Next Story