வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை உப்பு உற்பத்தி மீண்டும் பாதிப்பு


வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை உப்பு உற்பத்தி மீண்டும் பாதிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 12:30 AM IST (Updated: 10 April 2022 6:37 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வேதாரண்யம்:-

வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

உப்பு உற்பத்தி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மழையின் குறுக்கீடு காரணமாக இங்கு உள்ள உப்பளங்களில் 3 முறை உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 
கடந்த வாரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்ததால் உப்பு உற்பத்தி துரித கதியில் நடந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை பெய்து வருவதால் தற்போது 4-வது முறையாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 

மீண்டும் தொடங்க...

தற்போது ஏற்பட்டுள்ள உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு மேலாகும் என கூறப்படுகிறது. இதனால் உப்பு விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை 11.6 மி.மீ. மழையும், கோடியக்கரையில் 19 மி.மீ. மழையும் பதிவானது. 
உப்பளங்களை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில் உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

Next Story