கூலித்தொழிலாளி திடீர் சாவு

கூலித்தொழிலாளி திடீர் சாவு
கூலித்தொழிலாளி திடீர் சாவு
Published on

ஊட்டி

குன்னூர் சித்தி விநாயகர் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக வலிப்புநோய் இருந்தது. இதனால் குடும்பத்தினர் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய முருகன், ஊட்டி கூட்ஷெட் சாலையில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் திடீரென வலிப்பு ஏற்பட்டு விழுந்தார்.

இன்று காலை அப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து பார்த்தபோது வலிப்பு நோயால் முருகன் இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com