யானை வழித்தடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு சய்தது.
யானை வழித்தடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு
Published on

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு சய்தது.

யானை வழித்தடம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 14 கொண்ட ஊசி வளைவுகள் உள்ளன. குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து விரிவாக்க பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.

குறிப்பாக நந்தகோபால் பாலம் அருகே நடைபெறும் சாலை விரிவாக்க பணியானது, யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து நடைபெறுவதாக புகார் எழுந்தது தொடர்பாக அதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

நீதிபதிகள் ஆய்வு

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், பாரதிதாசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அவர்கள் இன்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள யானைகள் வழித்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் சாலை விரிவாக்க பணி நடைபெறும் நந்தகோபால் பாலம் அருகே யானைகள் கடந்து செல்ல போதுமான இடம் விடவில்லை, எனவே போதிய இடம் விட்டு சாலை விரிவாக்க பணியை மேற்கொண்டு அது தொடர்பாக அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com