சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு


சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2022 8:04 PM IST (Updated: 10 April 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

வந்தவாசி

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரில் இருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக போளூர் வரை 109 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.600 கோடி மதிப்பில் இருவழித்தட சாலையாக மேம்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. 

அதில் 5 உயர்மட்ட பாலங்கள், 12 சிறு பாலங்கள், 214 வாய்க்கால் பாலங்கள், வந்தவாசி, சேத்துப்பட்டு, மருதாடு ஆகிய பகுதிகளில் புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அந்தச் சாலையையொட்டி உள்ள கிராமங்களின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

 இந்தச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் எம்.கே.செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சிறுபாலங்கள் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.

 அப்போது அவர், ஒப்பந்த காலத்துக்குள் சாலைப் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திட்ட கோட்ட பொறியாளர் லட்சுமிகாந்தன், உதவிகோட்ட பொறியாளர்கள் எஸ்.பாஸ்கரன், அன்பரசி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story