குமரியில் மழை நீடிப்பு அதிகபட்சமாக நாகா்கோவிலில் 36 மி.மீ. பதிவு


குமரியில் மழை நீடிப்பு அதிகபட்சமாக நாகா்கோவிலில் 36 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 10 April 2022 8:12 PM IST (Updated: 10 April 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகர்கோவிலில் 36 மி.மீ. மழை பதிவானது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகர்கோவிலில் 36 மி.மீ. மழை பதிவானது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வழக்கம் போல காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 2 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கி விடுகிறது. 
அதன்படி நாகர்கோவிலில் பிற்பகல் 2.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 30 நிமிடங்கள் வரை நீடித்தது. அதன்பிறகும் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
நாகர்கோவிலில் 36 மி.மீ.
குமரி மாவட்டத்தில் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 36 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-12.4, குழித்துறை-25.6, மயிலாடி-12.2, புத்தன் அணை-21.8, சுருளகோடு-24, தக்கலை-2.4, குளச்சல்-12, இரணியல்-27, பாலமோர்-11.2, ஆரல்வாய்மொழி-3, கோழிப்போர்விளை-5, அடையாமடை-4, குருந்தன்கோடு-28, முள்ளங்கினாவிளை-10.6, ஆனைகிடங்கு-10.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதே போல அணை பகுதிகளை பொறுத்த வரை பேச்சிப்பாறை-16.2, பெருஞ்சாணி-22.4, சிற்றார் 1-25.6, சிற்றார் 2-34.2, மாம்பழத்துறையாறு-10.2, முக்கடல்-12.7 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணை நீர்வரத்து
மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 271 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 71 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 34 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 53 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Next Story