வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவுக்காக, வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு
Published on

ஆண்டிப்பட்டி:

மதுரை சித்திரை திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த 9 மாதங்களாக நீர்மட்டம் முழுக்கொள்ளளவில் உள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழாவை முன்னிட்டு வைகை அணையில் போதுமான நீர்இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

தண்ணீர் திறப்பு

இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதில் வருகிற 16-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.

இந்த விழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் இரண்டு நாட்கள் வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைக்கப்படும். 16-ந்தேதி வரையில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com