சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 10 April 2022 9:18 PM IST (Updated: 10 April 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

சுருளி அருவியில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

உத்தமபாளையம்: 

தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாதலமாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுருளி அருவியில் நீர்வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வாரவிடுமுறையையொட்டி சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story