கோடை நெல் சாகுபடி பணி மும்முரம்
கோட்டூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
கோட்டூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முப்போகம்
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கோடை சாகுபடியும் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆர்வமுடன் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது பருவமழை பெய்ததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
கோடைநெல் சாகுபடி
இதை தொடர்ந்து சம்பா மற்றும் தாளடி அறுவடை பணி முடிவடைந்தது. இதையடுத்து கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் 500 எக்டேரில் கோடை நெல் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தடையில்லா மின்சாரம்
ேகாட்டூர் பகுதியில் கோடை நெல் ரகங்களை பயிரிட்டு வருகின்றனர். கோடை நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதில்லை. இதனால் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. மேலும் கோடை சாகுபடிக்கு எந்தவித மானியமும் வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக கடந்த ஆண்டு 1,000 எக்டேரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 500எக்டேரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு கோடை நெல் சாகுபடிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கோடை நெல்லை அரசு கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story