கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்
கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்
கிருஷ்ணகிரி:
குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.
குருத்தோலை ஞாயிறு
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் மக்கள் தங்கள் கைகளிலே ஒலிவ மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு இயேசுவை கழுதை மீது அமர வைத்து எருசலம் நகரில் பவனி வந்தனர்.
அப்போது உன்னதங்களின் ஒசாண்ணா, ஆண்டவர் பெயரால் வருபவர், ஆசீர்வாதம் பெற்றவர் எனும் துதிப்பாடலை பாடியவாறு நகர்வலம் வந்தனர். இந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடி வருகிறார்கள்.
ஊர்வலமாக வந்தனர்
அதன்படி நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள புனித இன்னாசியார் ஆலயத்தில் இருந்து பெங்களூரு சாலையில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு, உன்னதங்களின் ஒசாண்ணா என்ற பாடலை பாடியவாறு சென்றனர்.
பின்னர் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், எலத்தகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள தேவலாயங்களில் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.
Related Tags :
Next Story