உடுமலை பஸ் நிலையம் அருகில் காரிலிருந்து 7 பவுன் நகை மற்றும் ரூ20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்


உடுமலை பஸ் நிலையம் அருகில் காரிலிருந்து 7 பவுன் நகை மற்றும் ரூ20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்
x
தினத்தந்தி 10 April 2022 9:50 PM IST (Updated: 10 April 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பஸ் நிலையம் அருகில் காரிலிருந்து 7 பவுன் நகை மற்றும் ரூ20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்

போடிப்பட்டி:
உடுமலை பஸ் நிலையம் அருகில் காரிலிருந்து 7 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
காருக்குள் கைப்பை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலையையடுத்த போடிப்பட்டி விஜயவாணி நகரைச் சேர்ந்த கிங் கிறிஸ்டோகுமார் என்பவரது மகன் சிரில் ரூபஸ் (வயது 38).சுற்றுச்சூழல் மற்றும் வன ஆலோசகராக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்தாருடன் உடுமலை பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். 
 அப்போது உடுமலை பஸ் நிலையம் அருகிலுள்ள ஓட்டல் அருகே காரை நிறுத்தி விட்டு சிரில் ரூபசின் மனைவி மற்றும் மாமியார் துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.மேலும் சிரில் ரூபஸ் ஓட்டலுக்குள் அமர்ந்து தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்து பார்த்தபோது காரின் பின் சீட்டில் வைத்திருந்த சிரில் ரூபசின் மனைவியுடைய கைப்பையைக்காணவில்லை.
வழக்குப்பதிவு
அந்த பையில் 6 பவுன் தங்க சங்கிலி, 1 பவுன் பிரேஸ்லெட் மற்றும் ரூ 20 ஆயிரம் இருந்துள்ளது.இதனைத் தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் கைப்பையைத் திருடிச் சென்றுள்ளனர். அக்கம்பக்கம் நண்பர்களுடன் இணைந்து தேடிப் பார்த்த சிரில் ரூபஸ் கைப்பை கிடைக்காததால் உடுமலை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
 மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆள்நடமாட்டம் நிறைந்த உடுமலை பஸ் நிலையம் அருகில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்

Next Story