கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் எதிரே வேகத்தடை அமைக்கப்படுமா?


கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் எதிரே வேகத்தடை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 10 April 2022 10:01 PM IST (Updated: 10 April 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் எதிரே வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் எதிரே வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நகராட்சி அலுவலகம்
கூத்தாநல்லூர் நகராட்சி புதிய அலுவலகம், லெட்சுமாங்குடி சாலையில், புதிய பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சி அலுவலகம் திருவாரூர், மன்னார்குடி சாலையையொட்டி உள்ளது.
 இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். 
விபத்துகள்
மேலும், நகராட்சி நுழைவு வாயில் எதிரே சாலையில் வேகத்தடை அமைக்காததால் வாகனங்கள் வேகமாக செல்லும் காரணத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட இடத்தில் ஆபத்தான வளைவுகளும் உள்ளதால் ஒவ்வொரு நாளும் விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் வாகன  ஓட்டிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் எதிரே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் எதிரே சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

Next Story