விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கான மாநில தேர்வு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு காலணிகள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்

விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கான மாநில தேர்வு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு காலணிகள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கான மாநில தேர்வு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு காலணிகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
மாணவர்கள் சேர்க்கை
தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றது. இதில் மாநில அளவிலான தடகளம், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு மாணவிகளுக்கு காலணிகளை வழங்கி மாநில போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீட்டுமனை பட்டா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எல்லப்பன்பாறை கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் 22 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி 22 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






