தர்மபுரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்
தர்மபுரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்
தர்மபுரி:
தர்மபுரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம் சென்றனர்.
சிறப்பு திருப்பலி
இயேசு கிறிஸ்துவை ஜெருசலேமில் ஞாயிற்றுக்கிழமை நாளில் கழுதையின் மேல் பவனியாக வந்தார். அப்போது கிறிஸ்தவர்கள் அவரை வரவேற்க கைகளில் குருத்தோலை ஏந்தி பாடல்களை பாடி சென்றனர். அந்த நாளை நினைவுகூறும் வகையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதையொட்டி அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.
தூய இருதய ஆண்டவர் பேராலயம்
தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயம் சார்பில் பாரதிபுரம் மெயின்ரோட்டில் இருந்து புதிதாக கட்டப்படும் தேவாலயம் வரை குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியபடி பங்கேற்றனர்.
பின்னர் பங்குதந்தை அருள்ராஜ் தலைமையில் உதவி பங்குதந்தை ஆனந்த் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோன்று செல்லியம்பட்டி, கோவிலூர், பாலக்கோடு, கேத்தனஅள்ளி, காரிமங்கலம், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஊர்வலம் மற்றும் திருப்பலி நடைபெற்றது.
Related Tags :
Next Story