ராமநவமியையொட்டி காரிமங்கலம், அரூர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை


ராமநவமியையொட்டி காரிமங்கலம், அரூர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 April 2022 10:25 PM IST (Updated: 10 April 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

ராமநவமியையொட்டி காரிமங்கலம், அரூர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி:
காரிமங்கலம் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் ராமநவமியையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மதியம் மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சாமி உற்சவம் தினந்தோறும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் உதயசங்கர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். 
காரிமங்கலம் அருகே காட்டுசீகலஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சஞ்சீவிராயன் மலைக்கோவிலில் ராமநவமியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் எருதுவிடும் விழா மற்றும் வானவேடிக்கை, கலை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி கோவில், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், மூதூர் பெருமாள் கோவில், மல்லிகுட்டை பெருமாள் கோவில், உட்பட பல்வேறு கோவில்களில் ராமநவமி விழா கொண்டாப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரூர் பகுதி பெருமாள் கோவில்களில் ராமநவமியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டது. பழையப்பேட்டையில் உள்ள கரியபெருமாள் கோவில், சந்தைமேட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. கடைவீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமியையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story