உடுமலையில் நடந்த குருத்தோலை ஞாயிறு


உடுமலையில் நடந்த குருத்தோலை ஞாயிறு
x
தினத்தந்தி 10 April 2022 10:48 PM IST (Updated: 10 April 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் நடந்த குருத்தோலை ஞாயிறு

உடுமலை, 
உடுமலையில் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
உடுமலை தளி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது. 
இந்த பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு காந்திசதுக்கம், பள்ளிவாசல் வீதி, தெற்குகுட்டை வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. 
இந்த நிகழ்ச்சிக்கு ஆலய சேகர குருவானவர் ரெவரண்ட் எஸ்.ஆனந்தன், குருத்துவ பணியாளர் சி.அன்புராஜ், சேகர செயலாளர் டி.பால் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஏ.ஜெயக்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டு, குருத்தோலைகளை சிலுவை போன்று வடிவமைத்து கைகளில் பிடித்து சென்றனர். 
அப்போது அவர்கள் "ஓசன்னா பாடுவோம் ஏசுவின்தாசரே, உன்னதத்திலே தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா" என்ற பாடலை பாடியபடி சென்றனர். பவனி ஆலயத்தை வந்தடைந்ததும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. 
புனித அற்புத அன்னை ஆலயம்
இதேபோன்று உடுமலை தளி சாலையில் உள்ள புனித அற்புத அன்னை ஆலயம், பழனி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அத்துடன் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலையால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Next Story