அன்னவாசலில் குதிரை வண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது


அன்னவாசலில் குதிரை வண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 10 April 2022 11:40 PM IST (Updated: 10 April 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

அன்னவாசல்:
அன்னவாசலில் தி.மு.க. சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் இரண்டு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. பெரிய குதிரை வண்டிகளுக்கு 10 கிலோமீட்டர், சிறிய குதிரை வண்டிகளுக்கு 8 கிலோமீட்டர் தூரம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரிய குதிரை வண்டி பிரிவில் 10 குதிரை வண்டிகளும், சிறிய குதிரை வண்டி பிரிவில் 16 குதிரை வண்டிகளும் என மொத்தம் 26 வண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய குதிரை வண்டி பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசான ரூ.25 ஆயிரத்து 69-மும், இரண்டாம் பரிசான ரூ.20 ஆயிரத்து 69-மும், மூன்றாம் பரிசான ரூ.15 ஆயிரத்து 69-மும், நான்காவது பரிசான ரூ.10 ஆயிரத்து 69-மும் வழங்கப்பட்டது. சிறிய குதிரை வண்டி பிரிவில் முதல் பரிசான ரூ.15 ஆயிரத்து 69-மும், இரண்டாம் பரிசான ரூ.12 ஆயிரத்து 69-மும், மூன்றாம் பரிசான ரூ.10 ஆயிரத்து 69-மும், நான்காவது பரிசான ரூ.8 ஆயிரத்து 69-மும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த குதிரை மற்றும் வண்டிகளை லாவகமாக ஓட்டி பார்வையாளர்களை கவர்ந்தவர்களுக்கு சிறப்பு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். 

Next Story