திருச்செங்கோடு அருகே சோளத்தட்டு தீயில் எரிந்து சேதம்
திருச்செங்கோடு அருகே சோளத்தட்டு தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ல வரகூராம்பட்டி ஊராட்சி நாச்சிபாளையம் ஊஞ்சக்காட்டை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவர் தனது மாடுகளுக்கு தீவனத்துக்காக சோளத்தட்டை வாங்கி வைத்திருந்தார். இந்த சோளத்தட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து முருகேசன் அளித்த தகவலின் பேரில் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் சோளத்தட்டை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story