பண்ருட்டி, காட்டுமன்னார்கோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி
பண்ருட்டி, காட்டுமன்னாாகோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி சென்றனர்.
பண்ருட்டி,
ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு இருந்த மக்கள் வஸ்திரங்களை விரித்து, மரக்கிளைகளை போட்டு, ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா’ என்று கூறி ஆர்ப்பரித்தார்கள் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.
இதை நினைவு கூரும் வகையில் லெந்து காலத்தின் கடைசி வாரத்துக்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையை குருத் தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி குருத்தோலை ஞாயிறான நேற்று அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனியாக சென்றனர்.
பண்ருட்டி
அந்த வகையில், பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் புனித வின்னரசி மாதா பேராலயத்தில் பங்கு தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடைப்பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு, குருத்தோலைகளை கையில் ஏந்தி கொண்டு பவனியாக சென்றனர். பின்னர் குருத்தோலை சிறப்பு திருப்பலி நடந்தது.
காட்டுமன்னார்கோவில்
இதேபோல், காட்டுமன்னார்கோவிலில் புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன்ராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. மேலும் தூய சிலுவை ஆலயத்தின் சார்பில் மறைத்திரு வின்சென்ட் தலைமையில் குருத்தோலை ஏந்தி பவனி சென்றனர்.
Related Tags :
Next Story