தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது


தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 11:48 PM IST (Updated: 10 April 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர், 
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் ஜோதிடத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 32), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வெள்ளாளப்பட்டி அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வீரராக்கியத்தை சேர்ந்த சரவணன், சக்திவேல், நித்திஷ், ஆகிய 3 பேரும் கோபால கிருஷ்ணனிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து சரவணன், சக்திவேல் ஆகியோரை கைது செய்தார். மேலும், இந்த வழக்கில் தப்பி ஓடிய நித்திஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story