கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி செய்து தராவிட்டால் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி செய்து தராவிட்டால் நடவடிக்கை
Published on

சிவகங்கை,-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார் .

சட்ட திருத்தம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.:-

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர் பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தங்களது பணி நேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

எனவே, அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். தவறும் நிறுவன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

அத்துடன் கடை நிறுவன சட்டத்தின் கீழ் வேலை அமைப்புப் பதிவேடு, சம்பளப் பதிவேடு, விடுப்பு விவரங்கள் பதிவேடு ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com