லாரி டிரைவரிடம் வழிப்பறி: 4 பேர் கைது
மானூர் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள அலவந்தான்குளத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 39). லாரி டிரைவரான இவர் கடந்த 7-ந் தேதி வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அலவந்தான்குளம்- கங்கைகொண்டான் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் சென்றபோது அவருக்கு பின்னால் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அலெக்சாண்டரை வழிமறித்தனர். பின்னர் கத்தியை வைத்து மிரட்டி, தாக்கி அவர் வைத்திருந்த ரூ.1,500, செல்போன், ஏ.டி.எம். கார்டையும் பிடுங்கி ரகசிய எண்ணை கேட்டு ரூ.2,000 எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலெக்சாண்டர் கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ெதாடர்புடைய பாளையங்கோட்டையை சேர்ந்த அருண் என்ற அருணாசலம் (வயது 20), ஐகிரவுண்டு பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (22), சமாதானபுரத்தை சேர்ந்த மகாராஜன் (22) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story