சாத்தமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


சாத்தமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 April 2022 1:22 AM IST (Updated: 11 April 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

சாத்தமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்
அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான  திருமானூர், திருமழபாடி, இலந்தைக்கூடம், அரண்மனை குறிச்சி, அன்னிமங்கலம், சாத்தமங்கலம் உள்பட சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story