வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2022 1:23 AM IST (Updated: 11 April 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

சுத்தமல்லியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேட்டை:
சுத்தமல்லி மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவருக்கும், சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெள்ளப்பாண்டிக்கும் (21) இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று வெள்ளப்பாண்டி, அவருடைய நண்பரான மூர்த்தி மகன் சுரேஷ் (19) ஆகிய 2 பேரும் மணிகண்டனின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அவருடைய தம்பி மாரிமுத்துவுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளப்பாண்டி, சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
1 More update

Next Story